'பெர்சனாலிட்டி டெவலெப்மெண்ட்' எனப்படும் ஆளுமை திறன் வளர்ப்பு பெரியவர்கள்-சிறியவர்கள் பாகுபாடின்றி, இன்று எல்லோருக்குமே தேவைப்படுகிறது. பள்ளி-கல்லூரியில் தனித்துவமாக விளங்க, நேர்காணலில் பிரகாசமாக ஜொலிக்க, அலுவலகத்தில் முதன்மையானவராக திகழ, ஆளுமை திறன் வளர்ச்சி அவசியம்.
நம்மை மெருகேற்றும் ஆளுமை வளர்ச்சிதான், சமூகத்தில் நமக்கான தனி அடையாளத்தை உண்டாக்கும். ''ஆளுமை வளர்ச்சி என்பது, வெறும் உடை நாகரிகத்துடன் நின்றுவிடாது. உடை, நடை, தோற்றப் பொலிவு, மற்ற நபர்களை அணுகும் விதம், மற்றவர்கள் முன்பு நாகரிகமாக நடந்து கொள்ளும் விதம்... இப்படி நிறைய இருக்கிறது. ஆனால் இக்கால இளைஞர்கள்-இளம் பெண்கள் இதில் கவனம் செலுத்துவது இல்லை. கிடைக்கும் வேலைகளில், தங்களை பொருத்திக்கொள்கிறார்களே தவிர தங்களுக்கு ஏற்ற வேலைகளை யாரும் தேடுவதில்லை. ''ஆண்களை விட பெண்களுக்கு, ஆளுமை வளர்ச்சி மிக அவசியம். ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகில் எப்படி நாகரிகமாக உடை அணிவது, எத்தகைய பண்புகளுடன் நடந்து கொள்வது, பொது இடத்தில் ஆண்களுடன் எப்படி பேசி பழகுவது, சக ஊழியர்களுடனான நட்பு எப்படி இருக்க வேண்டும், 'குட் டச்' மற்றும் 'பேட் டச்' போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.
வார்த்தைகள் என்பது கருத்துக்களை தெரிவிப்பதற்குத்தான் என்று எண்ணி பிறரின் பேச்சைக் கவனிப்பவர்கள் பேச்சின் முழு கருத்துக்களையும் கவனிக்க வாய்ப்புள்ளது. திறந்த மனதோடு எந்த கவனச் சிதறல்களும் இல்லாமல், பிறரின் பேச்சைக் கவனித்தால் பேச்சிலுள்ள அத்தனை கருத்துக்களையும் தெளிவாக புரிந்துகொள்ளலாம். பெண் தன் ஆளுமைகளை; கூர்மைப்படுத்துவதிலும் வெளிப்படுத்துவதும் நிலைக்கச் செய்வதும் அது சம்பந்தமாக உலகம் பேச வைப்பதும் முதலாவது பெண்சார்ந்த செயற்பாடாக கருத்தில் கொள்ளவேண்டும். ஆனாலும் அது பெண்சார்ந்தது மட்டுமல்ல என்பதனையும் சமுகம் – ஆண்கள் சார்ந்த தேவையாக கருதுதல் தொடர் தேர்ச்சியான வெற்றிக்கும் விடுதலைக்கும் வித்திடச் செய்யும்.
ஒரு பெண் சமூக அரசியல் பொருளாதார அந்தஸ்த்து கடந்து தனக்கேற்பட்ட தன் சார்ந்தவர்களும் ஏற்பட்ட கொடுமைகளை அச்சமின்றி பயமின்றி கூறத்தொடங்கும் பொழுது அச்சமூகத்தின் விருத்திக்கு முதலாவது வெற்றி கேடயம் கொடுக்கப்படுகின்றது. ஒரு சமூக பார்வையில் பொறுக்க முடியாத தனிமனித சுதந்திரத்தினையும் தன்மானத்தினையும்; பாதிக்கக் கூடிய எச்செயலானாலும் அது வெகுவாக பேசப்படவேண்டிய பொருளாகின்றது. எனவே அது உலகம் விழித்துக் கொள்ளும் வரையும் உரத்துக் கூறப்படவேண்டிய இலக்குள்ள செயலாக கருதப்படவேண்டும். பெண்கள் தம் குரல் உயர்த்தி உயிர் வலிமை உள்ளவரை போராடி வெற்றிக்கொள்வதே உலகத்தின் வர்க்க கட்டமைப்பின் வரலாற்று பதிவாக காணப்படுகின்றது. எனவே பெண் ஆளுமைகள் ஸ்திரம்பெற ஐக்கியப்பட்டு போராடுவோம்.