No results found

    பெண்கள் உள்ளாடைகள் அணிவது பற்றிய கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..


    கருப்பு நிறத்தில் உள்ளாடை (பிரா) அணிந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. இது ஒரு கட்டுக்கதை தான். உள்ளாடை விஷயத்தில் உலவும் கட்டுக் கதைகள் பற்றியும், உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

    கட்டுக்கதை 1: கருப்பு நிற உள்ளாடை மார்பக புற்றுநோயை உண்டாக்கும். உண்மை: கருப்பு நிற பிரா அல்லது அடர் நிற பிரா அணிவது மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்காது. அடர் நிற பிராக்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சிவிடும், அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படக்கூடும் என்பது கட்டுக்கதையை நம்புபவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. கருப்பு நிற பிரா, அடர் நிற பிரா, பிற வண்ண நிற பிரா அணிவது அல்லது பிரா அணியாமல் இருப்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது.

    கட்டுக்கதை 2: பிரா அணியாமல் இருப்பது மார்பகத்தை வேகமாக வளரச் செய்துவிடும். உண்மை: மார்பக அளவை குறைக்கும் விஷயத்தில் உள்ளாடை எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதேபோல் மார்பகங்களில் கிரீம்கள், லோஷன்கள், எண்ணெய் பயன்படுத்துவது அதன் அளவை பாதிக்காது. உடல் எடை அதிகரித்தால் மார்பக அளவு அதிகரிக்கும். உடல் எடையை குறைப்பது மார்பக அளவு குறைவதற்கு வித்திடும்.

    கட்டுக்கதை 3: இறுக்கமாக உள்ளாடை அணிவது புற்றுநோயை உண்டாக்கும். உண்மை: இறுக்கமாக உள்ளாடை அணிவது அசவுகரியத்தை ஏற்படுத்தும். தேவையற்ற உடல் தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும். ஆனால் புற்றுநோயை உண்டாக்குவதற்கு சாத்தியமில்லை. எனினும் மார்பகத்துக்கு பொருத்தமான அளவு கொண்ட உள்ளாடையை தேர்ந்தெடுப்பது நல்லது.

    கட்டுக்கதை 4: உள்ளாடை அணியாவிட்டால் மார்பகம் வலுவிழந்து விடும். உண்மை: மார்பகங்கள் தளர்வடைவதை பிராக்கள் தடுக்கும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. மார்பகங்கள் தொய்வடைந்தால், உள்ளாடையால் அதை தடுக்க முடியாது.

    கட்டுக்கதை 5: கம்பி இழை போன்ற பிராக்களை அணிவது புற்றுநோயை உண்டாக்கும். உண்மை: சாதாரண பிரா, ஸ்போர்ட்ஸ் பிரா உட்பட எந்த வகையான பிராவை அணிவதற்கும், மார்பக புற்றுநோய்க்கும் தொடர்பு இல்லை. இருப்பினும் கம்பி இழைகள் அழுத்தம் கொடுக்க தொடங்கினால் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

    கட்டுக்கதை 6: பிரா அணிந்து தூங்குவது புற்றுநோயை உண்டாக்கும். உண்மை: தூங்கும் போது பிரா அணிவது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. உள்ளாடை அணியாமல் தூங்கினால் மார்பக வடிவம் மாறிவிடும் என்பதற்கும் ஆதாரம் இல்லை. இறுக்கமாக பிரா அணிந்தால் மார்பகம் சரியான வடிவில் இருக்கும் என்று நினைப்பதும் தவறானது. தளர்வான பிரா அணிவதும் அசவுகரியத்தை கொடுக்கும். நிறைய பேர் தவறான அளவு கொண்ட பிராக்களை அணிகிறார்கள். இதனால் சீரான ரத்த ஓட்டமின்மை, சரும பிரச்சினை, சுவாச கோளாறு போன்ற பாதிப்புகள் உண்டாகக்கூடும். 

    இரவில் தூங்கும்போது மென்மையான பிரா அணிவது மார்பக அசைவை குறைக்கும். அதன் இயக்கத்தை கட்டுப்படுத்த உதவும். மார்பக வலியை குறைத்து சவுகரியமான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

    Previous Next

    نموذج الاتصال