பலம்என்ன ? தங்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் எளிதாக அறிந்து கொள்ளும் பலர் பலம் என்னவென்று அறிவதற்கு சிரமப்படுவார்கள். நம்மிடம் இருக்கும் திறமைகள் என்னென்ன? நாம் எதில் சிறப்பாக செயல்படுகிறோம்? எவற்றில் எல்லாம் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறோம்? என்பது போன்ற கேள்விகளை நம்மிடம் நாமே கேட்பதன் மூலம் நம்முடைய பலம் என்ன என்பதை எளிதாக கண்டறியலாம்.
பிறரிடம் கேட்டறிதல் எதிர்மறையான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் போது நமது பலம் என்னவென்று தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. அந்த சமயங்களில் பெற்றோர் ஆசிரியர், நெருங்கிய நண்பர் போன்றவர்களிடம் நாம் எதில் சிறப்பாக செயல்படுகிறோம்? என கேட்டறிந்து அந்த திறமைகளை மெருகேற்றிக்கொள்ளலாம். தள்ளிப்பபோடுவது கூடாது நமது கேள்விகளுக்கு விடை கிடைத்து திறமைகளை அறிந்த பிறகு அவற்றை வளர்த்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எந்த செயலையும் தள்ளி போடுவதற்கு நம்மிடம் காரணங்கள் இருக்கும். அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு நம்மைவளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.
தயக்க வேண்டாம் திறமைகளை மேம்படுத்தி கொள்ளும் முயற்சியின்போது நமக்குள் பல சந்தேகங்கள் எழலாம். எந்த தயக்கமும இல்லாமல் அவற்றுக்கான விடைகளை நமது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். புதிதாக ஒரு செயலை செய்யும் போதோ ஒரு விஷயத்தை கற்கும்போதோ மனதில் கேள்விகள் உருவாகும். அவற்றுக்கான விடைகளை கேட்டறிந்து அதற்கேற்ப செயல்பட்டு முன்னேறலாம். முக்கியமான கேள்வி முன்னேற நினைக்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு கேள்வியை தினந்தோறும் தங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். அன்றைய நாள் முடிந்த பிறகு தாங்கள் செய்த செயல்களை ஆராய்ந்து இதுதான் என்னுடைய சிறப்பான செயலா? என கேட்டு கொள்ளும் போது நாம் செய்த தவறுகள் நமக்கு தெரியவரும் அவற்றை திருத்திக்கொண்டு ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்றி அமைக்க வேண்டும். கேள்விகள் கேட்பதை என்றுமே நிறுத்திக்கூடாது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். நம்மிடம் நாம் கேட்கும் கேள்விகளும், அதற்கு பெறுகிற பதில்களும் நமது முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.