மேலும், மிதமான, அதிக வேதிப்பொருட்கள் அற்ற சோப்பைப் பயன்படுத்தலாம். அல்லது மிதமான Intimate Wash பயன்படுத்தலாம். ஆனால் அதில் எந்த நறுமணமும், அல்லது க்ளிட்டர் போன்ற தயாரிப்புகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், நறுமணமூட்டப்பட்ட வாஷ்கள் நிச்சயம் அரிப்பை ஏற்படுத்தும்என்கின்றனர் நிபுணர்கள். நம் சருமத்தில் எங்கெல்லாம் சூரிய ஒளிபடவில்லையோ, அங்கெல்லாம் ஈரம், வியர்வை ஆகியவை தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால், அந்தப் பகுதிகளில் கிருமித்தொற்று வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அதிலும் குறிப்பாக, பிறப்புறுப்பில் இப்படி நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், பிரைவேட் பார்ட்ஸை தினமும் இருமுறை மட்டும் சோப்பு, வஜைனல் வாஷ் என்று பயன்படுத்தி சுத்தமாக வைத்திருங்கள்.
மேலும், பிறப்புறுப்பை சுத்தம்செய்யும்போது, மேலிருந்து கீழாக, (அதாவது இடுப்புப் பகுதியில் இருந்து கீழ்நோக்கி சுத்தம் செய்ய வேண்டும்) கீழிருந்து மேல்பக்கமாக சுத்தம் செய்தால், பின்புறத்தில் இருக்கும் அழுக்கின் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர். பிறப்புறுப்பில் அரிப்பு இருக்கிறது என்றால், வெதுவெதுப்பான நீரால் அந்த இடத்தை ஐந்தாறு முறை வாஷ் செய்துபாருங்கள். சரியாகவில்லையென்றால், உடனே மருத்துவரைப் பார்த்து விடுங்கள். பிறப்புறுப்பின் சுத்தம் தான் உங்களை கருப்பை வாய்ப்புற்றுநோயில் இருந்து காப்பாற்றும் என்பதில் கவனம் தேவை. மேலும், மாதவிடாய் நிகழ்ந்துகொண்டிருக்கிற வயதில், வறட்சி, அரிப்புடன்கூட புண்களும் வருகிறது என்றால், பிறப்புறுப்பில் ஏதாவது கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கத்தான் வாய்ப்பிருக்கிறது. அது பரவுவதற்குள், உடனே ஒரு மகப்பேறு மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது.