No results found

    தாம்பத்தியம்: ‘அப்பா’ ஆகும் ஆண்மை ரகசியம்


    காலச்சக்கரம் வேகமாக சுழன்றுகொண்டிருக்கும். ‘அப்பா.. அப்பா...’ என்று தந்தையின் விரல்களை பிடித்துக்கொண்டு நடந்த சிறுவன், பள்ளிக்கு போவான். அடுத்து கல்லூரியிலும் காலடி எடுத்து வைப்பான். வேலைக்கு போவான். அப்புறம் என்ன.. கல்யாணமும் ஆகிவிடும். மனைவியோடு அவனும் தாம்பத்ய வாழ்க்கை நடத்தி தந்தையாகிவிடுவான். ஆண், தந்தையாக காரணமாக அமைபவை, வாதுமைப் பருப்பு அளவிலான ஒரு ஜோடி சுரப்பிகள். அவை, விரைகள். அதில்தான் விந்தணு எனப்படும் உயிரணு உற்பத்தியாகிறது. முக்கிய ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானும் சுரக்கிறது. இதுவே ஆணின் இனப்பெருக்க மையம்.

    விரைப்பைக்குள் இருப்பவை செமினிபெரஸ் டியூப்யூல்ஸ்: இவை விரைகள் முழுவதும் காணப்படும். 30 முதல் 60 செ.மீ. நீளமுள்ள ஆயிரக்கணக்கான குழாய்களின் கட்டமைப்பு இது. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சராசரியாக அரை ‘டிரில்லியன்’ உயிரணுக்களை வெளிப்படுத்து கிறான். லேடிக் செல்கள்: இவைதான் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை உற்பத்தி செய்பவை. இந்த ஹார்மோன்தான் ஆண் பாலுறுப்புகளின் வளர்ச்சியையும், வயதுக்கு வரும்போது ஏற்படும் மாற்றங்களையும் உருவாக்குகிறது. வாஸ் டிபரன்ஸ்: இது உயிரணுக்களை எபிடிடிமிஸில் இருந்து அனுப்புகிறது. எபிடிடிமிஸ்: இது சுமார் 20 அடி நீளமுள்ள சுருள் களால் அமைந்த குழாய். விரைகளில் இருந்து இது உயிரணுக்களைத் திரட்டுகிறது. உயிரணுக்கள் அங்குதான் முதிர்ச்சி அடைகின்றன.

    ஸ்க்ரோட்டம்: விரைகளைப் பாதுகாக்கும் தோல் பை போன்ற தோற்றம் கொண்டது இது. - பெரும்பாலான ஆண்களுக்கு, வலது விரையை விட இடது விரை சற்றுக் கீழாகத் தொங்குகிறது. இது இயல்பானதுதான். - பாலுணர்வு தூண்டப்படும்போது விரைகளின் அளவு அதிகரிப்பது உடல் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். - நாற்பது வயதை நெருங்கும்போது டெஸ்டோஸ்டீரான் உற்பத்தி குறையத் தொடங்குகிறது. - 1913-ல், சிகாகோ பல்கலைக்கழகத்தில் 33 வயதான ஒருவருக்கு முதல் முறையாக விரைமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உயிரணு உற்பத்தி ஆண் வயதுக்கு வரும்போது, விரைகளின் உள்ளடுக்கில் செமினிபெரஸ்டியூப்யூல்ஸில் உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒருவரின் வாழ்நாளில் சுமார் 12 ‘டிரில்லியன்’ ஸ்பெர்மட்டோஸோவாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எபிடிடிமிஸில் முதிர்ச்சி அடையும் அவை, வாஸ்டிபரன்ஸ் வழியாக நகர்ந்து அம்புல்லாவை அடைகின்றன. அங்கு அவை சேமித்து வைக்கப்படுகிறது. அதை நல்ல நிலையில் 42 நாட்களுக்கு ‘ஸ்டோர்’ செய்து வைக்க முடியும். உயிரணுக்கள் உருவாக்கத்துக்கான இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளுக்கு (ஸ்பெர்மட்டோஜெனிசிஸ்) 8 முதல் 10 வாரங்கள் ஆகும். சாதாரணமாக ஒரு மனிதனுடைய விந்து திரவத்தின் ஒவ்வொரு மில்லியிலும் 1 கோடியே 20 லட்சம் உயிரணுக்கள் இருக்கும். ஒரு உயிரணு, எட்டு அங்குலங்கள் நீந்தி முன்னேற ஒரு மணி நேரம் ஆகும்.

    ஹார்மோன் மாயாஜாலம் கருவில் வளரும் சிசுவின் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கு டெஸ்டோஸ்டீரானே முக்கிய பங்களிப்பு செய்கிறது. ஆண் குழந்தை பிறந்த முதல் சில வாரங்களில் டெஸ்டோஸ்டீரான் அளவு உயர்ந்து, பின் குறைகிறது. வயதுக்கு வரும்போது இது வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கிறது. குரல் உடையச் செய்கிறது. செபேசியஸ் சுரப்பிகள் பெரிதாவது, கொழுப்புக் குறைவது, தொண்டைச் சங்கு வளர்வது, அக்குளிலும், மறைவான பகுதிகளிலும் முடி வளர்வது, எலும்புகளின் அமைப்பு மாற்றம் போன்றவற்றுக்குக் காரணமாகிறது. வயதுக்கு வந்த ஆண்களின் பாலியல் ஆர்வத்துக்கும், அதற்கான சக்திக்கும் டெஸ்டோஸ்டீரானே காரணமாகிறது.

    எப்போதும் ‘குளிர்ச்சி’... உயிரணுக்களின் இயல்பான வளர்ச்சிக்கு உடம்பின் மற்ற பகுதிகளை விட விரைகளின் வெப்பநிலை குறைந்த பட்சம் 2 டிகிரியாவது குறைவாக இருக்க வேண்டும். அதற்காக இயற்கையாகவே விரைகள் உடம்பிலிருந்து தனியாக கீழ் இறங்கி அமைந்துள்ளன. இதன் வெப்ப நிலையைக் குறைக்கவோ, உடம்புடன் ஒட்டி வைத்து கதகதப்பூட்டவோ ஸ்க்ரோட்டல் சுவர் தசைகள் தளர்ந்து, சுருங்கி உதவுகின்றன. அதிகமாக காய்ச்சல் ஏற்படும் போது, உயிரணு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. விரைகளில் ஏற்படும் நோய்கள் விரைப்பை புற்றுநோய்- விரைப்பை பெரிதாவது அல்லது கட்டிபோல காணப்படுவதுதான் இதன் முதல் அறிகுறி. வழக்கமாக 40 வயதுக்கு மேல் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கிரிப்டோசிடிசம்- இந்த பாதிப்பு கொண்டவர் களுக்கு பிறப்பிலேயே விரைப்பை இறக்கம் இல்லாமல் இருக்கும். சில நேரங்களில் விரைகள் முழுமையாக விரைப்பைக்குள் வராமல் போகலாம். இப்பிரச்சினை ஏற்படும் 20 சதவீதமானவர்களுக்கு முதல் சில மாதங்களிலே சரி செய்துவிடலாம். மற்றவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும். டெஸ்ட்டிக்குலார்டார்ஸன்- விரைப்பைக்குள் விரை முறுக்கிக்கொண்டு, ரத்த விநியோகத்தை தடுக்கும் பாதிப்பு இது. இதற்கு உடனடி அறுவைச் சிகிச்சை அவசியம். ஹெர்னியா- இந்த பாதிப்பு ஏற்படும்போது குடல், அடிவயிற்றுச் சுவரைத்தாண்டி இன்கினல்கெனாலுக்குள் தள்ளப்படும். குடலை வெளியே தள்ளி, துவாரத்தைச் சிறிதாக்க அவசர அறுவைச் சிகிச்சை தேவைப்படும். வெரிக்கோசில்- இது விரைகளின் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் உருவாகிறது. வழக்கமாக இடது விரையில் இது காணப்படும். கடுமையாக இருந்தால் அறுவை செய்ய வேண்டும்.

    Previous Next

    نموذج الاتصال