No results found

    குழந்தைகளுக்குத் தாய்ப்பாலின் அவசியம்


    குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தானாக பால் குடிக்கத் தெரியாது என்று பவுடர் பால் தருவார்கள். மேலும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்றோ, இரட்டைக் குழந்தைகளாக இருந்தால் தாய்ப்பால் போதவில்லை என்றோ பவுடர் பாலைக் கொடுப்பார்கள். இளம் தாய்மார்கள் பால் கொடுப்பதில் நிறைய சிரமங்களைச் சந்திப்பதால், பவுடர் பால் கொடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். பச்சிளம் குழந்தைகளுக்கு பவுடர் பாலைக் கொடுப்பது நல்லதல்ல; தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். ஒவ்வொரு நாளுக்கும் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுக்க தாய்ப்பாலால் மட்டுமே முடியும். தாய்ப்பாலால் கொரோனா தொற்றுகூட குழந்தைக்குப்  பரவவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். அதனால் தாய்ப்பாலின் அற்புதங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை. பசும்பால் கொடுக்கும் வழக்கம் காலங்காலமாக இருக்கிறது. கன்றுகள் முட்டிமோதுவதால் இயற்கையாக பசுவின் மடியில் சுரக்கும் பால்தான் ஆரோக்கியமானது. இந்தக் காலத்தில் அதிக பாலைப் பெறுவதற்காக பசுக்களுக்கு சிலர் ஹார்மோன்களை ஊசியின் மூலம் செயற்கையாக செலுத்துகின்றனர். இந்த முறையில் கிடைக்கும் பாலை குழந்தைகளுக்குக் கொடுப்பதை தவிர்க்கலாம். இயற்கையாகப் புல்லைத் தின்று வளரும் மாடுகளாக இருந்தால், அந்தப் பாலை பயன்படுத்தலாம்.

    Previous Next

    نموذج الاتصال