No results found

    சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்


    சினைப்பை நீர்க்கட்டி (PCOD) பிரச்சினை ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படுகிறது. குறிப்பாக ஆண்களுக்குரிய ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும், பெண்மைக்குரிய ஹார்மோன்கள் குறைவாக இருக்கும். இதனால் சினைமுட்டை முதிர்ச்சி அடையாமல் நீர்க்கட்டிகளாக மாறுகின்றது.

    இதற்கு, குமரி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம். அடுத்து, கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை மூன்றையும் சமஅளவு எடுத்து பொடித்து ஒரு டீஸ்பூன் வீதம் காலை, இரவு பனை வெல்லத்தில் கலந்து சாப்பிட வேண்டும். மேலும், கழற்சிக்காய் பொடி-500 மி.கி., மிளகு பொடி -200 மி.கி. சேர்த்து வெந்நீரில் காலை, இரவு சாப்பிட வேண்டும். நொறுக்குத்தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். மனஅழுத்தம் இன்றி இருப்பது அவசியம். 

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா) 

    மின்னஞ்சல்: doctor@dt.co.in, 

    வாட்ஸ் அப்: 7824044499

    Previous Next

    نموذج الاتصال