No results found

    மங்கையர் மலர்களை சூடுவதால் தீரும் உடல் பிரச்சனைகள்


    பூக்களை சூடிக்கொள்வதால் பெண்களை பூவையர் என்று குறிப்பிடும் சொல் வழக்கு ஏற்பட்டது. மலர்களை சூடுவதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும். மலர்கள் மருத்துவ தன்மை கொண்டவை. ஒவ்வொரு பூவையும் குறிப்பிட்ட கால அளவு வரை மட்டுமே சூடிக்கொள்ள வேண்டும். அவ்வாறு சூடுவதால் மட்டுமே நன்மைகள் ஏற்படும். பூக்கனை சூடிக்கொள்வதன் மூலம் பெண்மைக்கான ஹார்மோன்கள் சீராக சுரக்கக்கூடும். பூக்களில் உள்ள மிக நுட்பமான ஆற்றல் மூளையின் செல்களால் உட்கிரகிக்கப்படுவதால் நாளமில்லா சுரப்பிகள் மற்றும் நாளமுள்ள சுரப்பிகள் நன்றாக இயங்குகின்றன. ரோஜா பூவை சூடிக்கொள்வதால் தலைசுற்றல், கண் நோய் போன்றவை குணமாகும். ரோஜாவை இரண்டு நாட்கள் வரை சூடிக்கொள்ளலாம்.

    செண்பகப்பூவை 15 நாட்கள் வரை சூடிக்கொள்ளலாம். இதன் மூலம் பார்வைத்திறன் மேம்பாடு அடையும். வாதம் சம்பந்தமான நோய்கள் குணமாகும். கிராமப்புற பெண்கள் அதிகம் பயன்படுத்தும் கனகாம்பரப்பூ தலைவலியை சரி செய்கிறது. இதை ஒரு வேளை மட்டும் சூடிக்கொள்ளலாம். அனைத்து பெண்களும் விரும்பக்கூடிய மல்லிகைப்பூ கண்களுக்கு குளிர்ச்சி தருவதுடன் மன அமைதியை ஏற்படுத்தும். திருமணமான பெண்கள் மல்லிகையை அடிக்கடி சூடிக்கொள்வதன் மூலம் தாம்பத்திய உறவின் போது கணவன் மனைவி இருவரது ஹார்மோன் சுரப்பும் தூண்டப்படுவதால் கருவுறுதல் எளிதாக நடக்கும். மல்லிகைப்பூவை அரைநாள் மட்டுமே கூந்தலில் சூடிக்கொள்ள வேண்டும்.

    தாழம்பூவை சூடிக்கொள்வதால் அதன் நறுமணம் சீரான தூக்கத்தை ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் சோர்வை நீக்கக்கூடிய தன்மை இந்த பூவிற்கு உள்ளது. தாழம்பூவை அதன் வாசனை இருக்கும் வரை சூடிக்கொள்ளலாம். நறுமணம் வீசக்கூடிய பூக்களை மட்டும் தான் சூட வேண்டும். வாசமில்லாத மலர்களை சூடிக்கொள்வதால் கூந்தல் வறட்சி ஏற்படலாம். பூச்சூடும் போது காதின் மேல் மற்றும் கீழ் நுனியில் சற்றே இடைவெளி விட்டு சூட வேண்டும். துளசி, மரிக்கொழுந்து போன்றவற்றை பூக்களோடு இணைத்து கட்டி சூடிக்கொள்வதன் மூலம் ஈறு, பேன் போன்றவை நீங்கும். பூக்கள் உடலில் உள்ள செல்களை உற்சாகப்படுத்தி மன அமைதியை ஏற்படுத்தும் குணம் கொண்டவை. இன்றைய தலைமுறை இளம் பெண்கள் பூச்சூடுவதை பழக்கப்படுத்தி கொள்வது சிறந்ததாகும்.

    Previous Next

    نموذج الاتصال