No results found

    வெற்றிக்கான அறிவுரைகள்


    கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துபவனுக்கே வெற்றி கிடைக்கும். அவனே சிறந்த சாமர்த்தியசாலியாகவும் இருப்பான். முயற்சி என்பது வேறொன்றும் இல்லை.. நீ தினமும் இரவு ‘என்னவாக ஆக வேண்டும்’ என்று கனவு காண்கிறாயோ, அதை நிஜமாக மாற்றுவதுதான். நீ இன்று செய்யும் சின்னச் சின்ன முயற்சிகள், நாளை உன்னுடைய வெற்றியைத் தாங்கப் போகும் ஆணி வேர்கள் என்பதை மறவாதே. எந்த ஒரு காரியத்திலும் பொறுமையோடும், நம்பிக்கை யோடும் செயல்படுவதால், சோதனைகள் அனைத்தும் சாதனைகளாக மாற வழி ஏற்படும். எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும், அதை சரியாக செய்வதற்கான வழி ஒன்று இருக்கும். அதே போல, உன் பிரச்சினைகளை தீர்க்கவும், சிந்தனையில் வழி உண்டு.

    வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை உன் உள்ளத்தில் இருக்கும் வரை, தோல்வி என்னும் தடைகள் உன் கண் களுக்குத் தெரியாது. மகிழ்ச்சிக்கான ஒரு கதவு அடைபட்டால், அடுத்த கதவு திறக்கும். நாம் மூடிய கதவையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தால், நமக்காக திறக்கப்பட்ட மற்றொரு கதவைப் பார்க்க முடியாமலேயே போய்விடும். உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள். ஏனெனில், வேறு எவராலும் உங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாது. ‘எனக்கு ஒரு பிரச்சினை’ என்று சொல்லும் போது பயமும், கவலையும் ஆட்கொள்ளும். அதையே ‘எனக்கு ஒரு சவால்’ என்று அணுகும்போது, தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். பறக்க வேண்டும் என்று ஆசைகொள்பவர்கள், உங்கள் சுமைகளை தூக்கி எறிந்து, உடலையும், மனதையும் இலகுவாக்க வேண்டியது கட்டாயம்.

    Previous Next

    نموذج الاتصال