யாருக்கெல்லாம் ஏற்படும்? * புதிதாக திருமணமாகி இல்லறத்தில் ஈடுபடும் பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை ஹனி சிஸ்டைட்டிஸ் என்பார்கள். கர்ப்பிணிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். *நோய் எதிர்பு சக்தி குறையும் போது பாதிப்பு வரலாம் * நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு சிறுநீர்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். * *சுகாதாரமில்லாத பொது கழிப்பிடத்டித பயன்படுத்தும் போதும் இந்த பிரச்சனை ஏற்படலாம். எப்படி தவிர்ப்பது? நாம் பயன்படுத்தும் கழிப்பிடத்தையும் உடலையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். சுகாதாரம் இல்லாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணியாக உள்ளது. இது தவிர பிறப்பிலேயே சிறுநீர்ப்பிரச்சனைகள், சிறுநீரக அடைப்பு போன்ற பாதிப்பு இருக்கும் பட்சத்தில் இந்த தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால் சிறுநீர் வரியில் பாதிப்பு ஏற்பட்டு தொற்று ஏற்படலாம்.
அறிகுறிகள் * சிறுநீர் கழிக்கும் பது எரிச்சல் அதிகமாக இருக்கும் *சூடான சிறுநீர் செல்லும் * சிறுநீர் குறைவாக அடிக்கடி கழிப்பது * பெண்களுக்கு அடி வயிற்றில் வலி இருக்கும். *காய்ச்சல், குளிர் ஏற்படும். * சிறுநீர் கழிக்கு போது ரத்தம் வரலாம். எப்படி உறுதி செய்வது? சிறுநீர் பரிசோதனை, யூரின் கல்ச்சர் போன்ற சோதனைகளின் மூலம் சிறுநீர் தொற்று இருப்பதை உறுதி செய்யலாம். இதை குணப்படுத்துவதற்கு மருத்துவரின் சரியான ஆலோசனையுடன் மருந்துகள் உட்கொண்டால் போதும். முறையில்லாமல் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு நேரும். கர்ப்பிணிக்பெண்களுக்கு எடை குறைவான குழந்தை பிறப்பு, குறைப்பிரசவம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். செய்ய வேண்டியவை.. * தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். *சிறுநீர் பாதையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். * பொது கழிப்பிடங்களை பயன்படுத்த நேர்ந்தால் சுகாதராத்தில் கவனம் தேவை. * நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது கூடாது * சுகாதாரமான பழக்க வழக்கங்களுடம் மேற்சொன்ன விஷயங்களை கடைபிடித்து வந்தால் சிறுநீர் தொற்றிலிருந்து நம்மை காத்து கொள்ளலாம், என்றார்.