No results found

    முடிவு எடுத்த பின்பு கவலை வேண்டாம்…


    ஒவ்வொரு முடிவிலும், புதியவற்றுக்கான தொடக்கம் இருக்கும். அந்த வகையில், நாம் எடுக்கும் எந்த முடிவும், புதிய செயல் அல்லது நிகழ்வின் ஆரம்பமாக அமையும். எடுக்கும் முடிவுகளின் மூலம் நிகழவிருக்கும் நன்மை-தீமைகளைப் பற்றிய பயம், நம்மை முடிவு எடுக்க விடாமல் தடுக்கும். வாழ்வில் தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ, சமூகம் சார்ந்தோ முடிவுகளை எடுக்கும்போது, அவற்றால் கிடைக்கும் நல்ல பலன்களை மட்டும் கருத்தில்கொள்ள வேண்டும். தெளிவாக சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகள், ஒருவரது வாழ்வில் வெற்றிக்கான திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன. அத்தகைய முடிவை எடுக்கும்போது நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க நேரிடலாம். அவற்றை எண்ணி கவலை கொள்ளாமல் தொடர்ந்து பயணிக்கும்போது நேரம், சூழ்நிலை மற்றும் எண்ண ஓட்டங்களின் மாற்றத்தால் புதிய பாதை உண்டாகும். அப்பாதையானது நம் வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே சிந்தித்து ஒரு முடிவை எடுத்த பின்பு எந்தக் கவலையும் இல்லாமல் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருவேளை அது தவறாக இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள்.

    Previous Next

    نموذج الاتصال