No results found

    வெற்றியை நிர்ணயிக்கும் நிர்வாகத் திறமை


    நம்மால் முடியாதது என்று ஒன்றுமில்லை. கொஞ்சம் முயற்சியும், விடாமுயற்சியும் இருந்தால் சிறு தொழிலில் கூட கோடீஸ்வரனாகி விடலாம். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் நேர மேலாண்மை முக்கியம். அத்துடன் அந்த வியாபாரத்தை தொடங்கி அதை வழி நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. பல இடர்பாடுகளையும், கடினமான முயற்சியும் இருந்தால் தான் எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெற முடியும். தொழில் முனைவோர் என்பவர் ஒரு நிறுவனத்தை உருவாக்குபவர் மட்டுமின்றி அந்த நிறுவனத்தை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். நிச்சயமற்ற சூழ்நிலையில் புதிய மற்றும் மேலான வழிகளின் மூலம் நல்ல முடிவு எடுக்கும் திறமையின் மூலம் செயல்படுவதையே நிர்வாகத்திறமை என்பர்.

    வடிவமைத்தல் மற்றும் செயலாக்குதலில் பொறுப்பேற்று இடர்பாடுகளை யூகித்து வியாபார யுத்திகளை கையாண்டு ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பது தான் நிர்வாகத்திறமை. முன்னோக்கு பார்வையுடன் முதலீடு மற்றும் உற்பத்தி வாய்ப்புகள், புதிய தயாரிப்பு செயல்முறை, முதலீட்டை பெருக்குதல், வேலையாட்களை கூலிக்கு அமர்த்துதல், மூலப்பொருட்களை வாங்குதல் மற்றும் நிறுவனத்தின் அன்றாட வேலைகளை கவனித்து நிர்வகிக்கும் மேலாளர்களை நியமித்தல் ஆகியவை தான் ஒரு நிர்வாகியின் பணியாகும். சொந்தமாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வளர்ச்சியடைய செய்யும் நபரே தொழில் முனைவோர் ஆவார். இவர் நிச்சயமற்ற சூழ்நிலையில் இடர்பாடுகளையும், ஆபத்துகளையும் மேற்கொண்டு தனது இலக்கை அடைவார். புதுமைகளை உருவாக்குபவர், விடா முயற்சியுடன் செயல்படுபவர், உறுதியான தனித்தன்மையுடன் பிரதிபலிப்பவர் தான் தொழில் முனைவோர். புதிய உற்பத்தி முறை மற்றும் பொருட்களை அறிமுகப்படுத்துதல், இடர்பாடுகளையும், ஆபத்துக்களையும் சந்திக்கும் மனப்பாங்கு படைத்தவர், நிறுவனத்தை ஒழுங்கு படுத்துதல் ஆகியவை தான் தொழில் முனைவோரின் பண்புகள் ஆகும். புதுமைகளை உருவாக்கும் தொழில்முனைவோர்கள், அதிரடி பரிசோதனை செயல்பாடுகளில் தீவிரமும் மற்றும் கவனிக்கத்தக்க சாத்தியங்களை நடைமுறை படுத்தும் புத்திசாலித்தனம் கொண்டவர்கள், மற்றவர்களின் பாணியை பின்பற்றி முன் உதாரணத்தை கடைபிடிப்பவர்கள், நல்ல நடைமுறைகளை பின்பற்றுபவர்கள் என தொழில்முனைவோர்களை பிரிக்கலாம். எந்த ஒரு தொழிலில் ஆரம்பித்த உடனேயே வெற்றி காண முடியாது. சிறிது, சிறிதாக உழைத்தால் வெற்றி சிகரத்தை எளிதில் தொட்டு விடலாம்.

    Previous Next

    نموذج الاتصال